பசி! பசி!

Posted: April 30, 2016 in Uncategorized

Handwriting-007.jpg

குத்துயிரும் கொலையுயிருமா கெடக்கு! முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன்.

தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன்.

தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல. Read the rest of this entry »

Advertisements

சோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு

சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது.

“கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா? நட்பா?” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர்.  பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து மாணவர்கள் பேசி அரங்கமெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்தனர். புலவர் ராமன், மற்றும் பேராசிரியர் சௌந்தரவல்லி ஆகியோர் இரு அணிகளுக்கும் தலைமை தாங்கினர்.

பட்டிமன்றத்தில் பேசிய மாணவர்கள், ஹரி கிருஷ்ணன், அஜய், லில்லி ப்ரீத்தி, ரமா பிரபா, ஆகியோரது பேச்சு அனைவரையும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பதாக அமைந்து அனைவரது பாராட்டையும் பெற்றது. பின்பு  கலைவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சோனா தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் திரு. ஜெயப்ரகாஷ் மற்றும் கல்வி இயக்குனர் திரு.கௌஷிக் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவினை தமிழ் மன்ற பொறுப்பாளர்கள் பேராசிரியர்கள் வெங்கடேசன், சசிகலா, மற்றும் ரியாஸ் அகமத் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.


pen_on_lined_paper_1_bw_FreeTiiuPix.comவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது.

நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து  வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள்.

இப்போது கொஞ்சம்  இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது. Read the rest of this entry »


A hot sunny Sunday! It is around 12.00 pm now. I am sitting in my bed, thinking about something strange, as usual.

“Extra terrestrial intelligence” (ET)!

Somewhere in your life, if you are happened to read something about Mayans, Pyramids, crop circles, stone Hench, UFO, etc you might have come across ET, at least as a movie.

Spare a little time to know about the most interesting matter that humans trying to know on universe.

We humans have come a long way in our planet. We have seen and understood so much during the phases of our evolution. We have traced our origin starting from big bang theory to present day super dynamism in the universe. Our universe was born 12 million years ago, our solar system 5 million years ago; our human originated as Homo erectus before 100000 years ago, our great ancestors Neanderthal men originated only 4000 years ago. Read the rest of this entry »


pen_on_lined_paper_1_bw_FreeTiiuPix.comநீண்ட நாட்களாகியருக்கும்.! ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன்.

இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். Read the rest of this entry »


தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

பண்டைப்பெரும் புகழ் உடையாமோ? இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா!
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா?
தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா?
தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா?
தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம்
தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா?

செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா?
தில்லி நரிதான் நடுங்கிற்றா இல்லையா?
முந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை
முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா?
தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா?
தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா?
தமக்குத் தமிழகம் அடிமையே என்னும்
சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?

………..இன்னிக்கி ஞாயற்றுக்கிழமை .! விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது..!? எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.

“மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்.. – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான்.

தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று சவுண்டு போட்டு கம்பார்த்மன்டையே திருதிருவென பார்க்கவைத்துவிட்ட பாசக்கார மாணவன்.

தமிழ் மன்றத்தில் நான் அவனை பார்த்திருக்கிறேன், அதனாலோ என்னவோ என் கையில் இருந்த இந்த தமிழ் புத்தகத்தை வாங்கிப்புரட்ட ஆரம்பித்தான். எடுத்தவுடனே.. நடுவில் எதோ ஒரு பக்கத்தை வாசிக்க தொடங்கிவிட்டான். என்ன செய்கிறான் என்று சற்று கவனித்தபோது அவன் புரிந்துகொள்ளத் தினருவது முகதில் தேர்ந்தது.

என்ன தம்பி கஷ்டமா இருக்க படிக்க? என்று கேட்டதற்கு, “ஆமா சார் ! கொஞ்சம் மெதுவா கவனிச்சு படிச்சாதான் லேசா புரியரமாதுரி இருக்கு” என்றான்.

அடடே…! சேம் பின்ச்..! Read the rest of this entry »