” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா? நட்பா?”

Posted: March 10, 2016 in Uncategorized

சோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு

சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது.

“கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா? நட்பா?” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர்.  பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து மாணவர்கள் பேசி அரங்கமெங்கும் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்தனர். புலவர் ராமன், மற்றும் பேராசிரியர் சௌந்தரவல்லி ஆகியோர் இரு அணிகளுக்கும் தலைமை தாங்கினர்.

பட்டிமன்றத்தில் பேசிய மாணவர்கள், ஹரி கிருஷ்ணன், அஜய், லில்லி ப்ரீத்தி, ரமா பிரபா, ஆகியோரது பேச்சு அனைவரையும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைப்பதாக அமைந்து அனைவரது பாராட்டையும் பெற்றது. பின்பு  கலைவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதள்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சோனா தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் திரு. ஜெயப்ரகாஷ் மற்றும் கல்வி இயக்குனர் திரு.கௌஷிக் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவினை தமிழ் மன்ற பொறுப்பாளர்கள் பேராசிரியர்கள் வெங்கடேசன், சசிகலா, மற்றும் ரியாஸ் அகமத் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

Comments
  1. Nithya says:

    Super

Leave a comment