இன்னிக்கி ஞாயற்றுக்கிழமை .! விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது..!? எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.

“மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்.. – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான்.

தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று சவுண்டு போட்டு கம்பார்த்மன்டையே திருதிருவென பார்க்கவைத்துவிட்ட பாசக்கார மாணவன்.

தமிழ் மன்றத்தில் நான் அவனை பார்த்திருக்கிறேன், அதனாலோ என்னவோ என் கையில் இருந்த இந்த தமிழ் புத்தகத்தை வாங்கிப்புரட்ட ஆரம்பித்தான். எடுத்தவுடனே.. நடுவில் எதோ ஒரு பக்கத்தை வாசிக்க தொடங்கிவிட்டான். என்ன செய்கிறான் என்று சற்று கவனித்தபோது அவன் புரிந்துகொள்ளத் தினருவது முகதில் தேர்ந்தது.

என்ன தம்பி கஷ்டமா இருக்க படிக்க? என்று கேட்டதற்கு, “ஆமா சார் ! கொஞ்சம் மெதுவா கவனிச்சு படிச்சாதான் லேசா புரியரமாதுரி இருக்கு” என்றான்.

அடடே…! சேம் பின்ச்..! Read the rest of this entry »

Advertisements


IMG-20140621-WA0007

“குட் மோர்னிங் குரு..!” தினமும் காலையில் என் மொபைலில் வந்து தவறாமல் விழும் தீபிகாவின் மெசேஜ்.

“நற்காலை அய்யா” என்று வாட்ஸ் அப்பில் காபி அனுப்புவார் விஜயகுமார்.

இப்படி எத்தனையோ மறவா நேசத்தை தாண்டித்தான் ஒரு ஆசிரியனின் நாள் தொடங்குகிறது. எல்லோரும் நேற்றைய மாணவர்கள். இன்று, உலகில் ஏதேதோ மூலையில் வெவ்வேறு பொறுப்புக்களில் புதிய அடையாளங்களோடு, என்றும் என் பழைய மாணவர்களாய் இருக்கிறார்கள்.

உண்மையில் இவர்கள்தான் எனக்கு ஆசிரியர்கள். Read the rest of this entry »


 

Tamil mandram

நேரம் சரியாக மாலை 5.30 மணி. மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் அரங்கத்தை ஒழுங்கு செய்துகொண்டிருக்க, தமிழுக்காக கூடிய அந்தத் திரளான கூட்டம் , பேச்சாளர் மற்றும் நிர்வாகிகள் வந்ததைக் கண்டதும் ஆர்ப்பரித்தது.

எப்போதும் சோனா தமிழ் மன்றத்தின் கலை விழாவிற்குத் தானாகவே கூடும் கூட்டத்திற்கு முதல் காரணம், அங்கு பேசவரும் பேச்சாளர்கள், ஒரு மணிநேரம் பேசினாலும், அது பொழுதைப் போக்குகிற பேச்சாக இல்லாமல் பொழுதை ஆக்குகிற பேச்சாகவே இருக்கும் என்பதால் தான். தமிழருவி மணியன், முனைவர்.கு.ஞானசம்பந்தன், பட்டிமன்றம் ராசா, இவர்கள் வரிசையில் இந்தமுறை சிறப்பான துடிப்பான பேச்சை நம் நெஞ்சில் நிறுத்திச் சென்றவர் “திரு.பாரதி கிருஷ்ணகுமார். Read the rest of this entry »


புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை ; விதைக்கப்படுகிறார்கள்..!

தன்கள் தாய் நிலங்களில் , எந்த மக்களுக்காக போரடினார்களோ அவர்கள் நெஞ்சில்; அவர்கள் விதையாய் விடுதலைப் பொறியாய் விதைந்து முளைக்கிறார்கள். உலக வரலாற்றிலேயே, ஒரு இனத்தின் ஒரு தேசத்தின் மக்களுக்கல்லாது , உலக மக்கள் அனைவராலும் புரட்சி நாயகனாய், வழிகாட்டும் தலைவனாய் ஏற்கப்படிருக்கும் ஒரே “மனிதர்“, எர்னஸ்டோ குவேரா..! Read the rest of this entry »சரித்திரம் சாகாது..!

அது நமக்கும் வருங்கால சமூகத்திற்கும் பாடங்களை கற்றுக்கொடுத்குக் கொண்டே இருக்கும். சரித்திரம் சிலரை போற்றுகிறது..சிலரை தூற்றுகிறது..!

சிலர் நாயகர்கள் . சிலர் வில்லன்கள். நிஜமோ? மிகைபடுத்திக்கூரும் புனைவோ..! சிலரது வரலாறு நம்மை சிலிர்க்க வைக்கிறது..!சிலரது வரலாறு நம்மை மிரட்டுகிறது…! அந்த மிரட்டும் பட்டியலில் அனைவரையும் மிஞ்சி நிற்கும் ஒருவர்(ன்) “அடால்ப் ஹிட்லர்Read the rest of this entry »


சீருடை அணிந்து , சீராகச் சென்றால் அவன் பள்ளி மாணவன்.. சிகரட்டோடு சீக்ரெட்டாக கைபேசியில் பேசிச்சென்றால் அவன் கல்லூரி மாணவன்.

இதுதானே நம் ஊடகங்கள் உருவாக்கியுள்ள பிம்பம்.?

மாணவர்களில் ஒவ்வொருவரும் நூறுவகை.. நான் கண்ட மாணவர்கள் அதில் வேறுவகை..! Read the rest of this entry »