நான் சிகப்பு மனிதன்..!

Posted: July 3, 2014 in Uncategorized


இன்னிக்கி ஞாயற்றுக்கிழமை .! விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது..!? எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.

“மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்.. – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான்.

தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று சவுண்டு போட்டு கம்பார்த்மன்டையே திருதிருவென பார்க்கவைத்துவிட்ட பாசக்கார மாணவன்.

தமிழ் மன்றத்தில் நான் அவனை பார்த்திருக்கிறேன், அதனாலோ என்னவோ என் கையில் இருந்த இந்த தமிழ் புத்தகத்தை வாங்கிப்புரட்ட ஆரம்பித்தான். எடுத்தவுடனே.. நடுவில் எதோ ஒரு பக்கத்தை வாசிக்க தொடங்கிவிட்டான். என்ன செய்கிறான் என்று சற்று கவனித்தபோது அவன் புரிந்துகொள்ளத் தினருவது முகதில் தேர்ந்தது.

என்ன தம்பி கஷ்டமா இருக்க படிக்க? என்று கேட்டதற்கு, “ஆமா சார் ! கொஞ்சம் மெதுவா கவனிச்சு படிச்சாதான் லேசா புரியரமாதுரி இருக்கு” என்றான்.

அடடே…! சேம் பின்ச்..!

20140703_132433ஒருவழியாக மேலோட்டமாக மார்க்ஸின் கருத்துகளை அவனுக்கு புரியவைத்துவிட்டதாக எண்ணி என் பேச்சை முடித்துக்கொண்டேன். இந்தக் கேள்வி எப்போதும் எனக்கு இருந்துவந்துள்ளது. நான் படிச்ச பொதுவுடைமை புத்தகங்கள் எல்லாமே (??) ஒரு பாணியில்,  ஜோர்கன்ஸ் (Jorgans) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சில துறை சார்ந்த வார்த்தைகளுடனேயே எழுதப்படுகிறது. எளிதில் புரிவது சாத்தியமாக இல்லை. ஏன் அப்படி.?

“1800 ல மார்க்ஸும் எங்கல்ஸ் உம் ஜெர்மானிய மொழி நடைல எழுதுன புத்தகத்த படிச்சா, அதோட இலக்கிய நடை கொஞ்சம் கஷ்டமாதான இருக்கும்னு ..!” நீங்க கேக்குற மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது..

அதுவும் சரிதாங்க, ஏன்னா, தாய் மொழியான
தமிழில் இருக்குற இலக்கியங்களே இன்றைக்கு நம்மால முழுசா புரிஞ்சு படிக்க முடியலையே..?! எனக்கெல்லாம் மகாகவி பாரதி எழுதிய பாடல்களே சுமாராதான் புரியும். அவ்வளவு அற்புதம் நம் தலைமுறையின் தமிழ்ப் புலமை. சரி இப்போ விசையத்துக்கு வரேன்.

என்ன செய்யலாம்.? எப்புடி இந்த பொதுவுடைமை புத்தகத்துல இருக்குற விஷயத்த எளிதா சொல்றதுன்னு யோசிச்சேன். சரி அந்த புத்தகத்த படிக்க படிக்க அதில் இருக்குற சாரமான விஷயத்த என் நடைல எழுதலாம்னு நெனச்சுதான் இந்த கட்டுரைய எழுத ஆரம்பிச்சேன்.

…….

மானுடத்தை வழிநடத்திய மாமனிதர்கள் வரலாற்றிலே இறந்தும் இன்னும் வாழ்ந்துவருகிறார்கள்.  சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாடோ, போன்ற தத்துவ மேதைகலானாலும் சரி, நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்கலானாலும் சரி பலதுறைகளில் மானுடத்தை திளைக்கச் செய்தவர்கள் பலர். அவ்வாறு மானுடம் போற்றும் மாமனிதர்களில் மார்க்ஸ் என்ற மாமேதைக்கு என்றைக்கும் அழியாத இடம் உண்டு. இன்றைக்கும் , என்றைக்கும்.

தன வாழ்நாள் முழுவதும் வாசித்தும் யோசித்தும் எழுதியும், மனிதநேயத்தின் உச்சமான பொதுவுடைமையை விஞ்ஞான ரீதியில் நம் அனைவருக்கும் விளக்கிச் சென்றவர், மார்க்ஸ்.

சில ரொட்டித்துண்டுகளை மட்டும் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு , தண்ணீர் குவளையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு, நூலகத்திலேயே தன வாழ்நாளை தொலைத்து, வறுமையில் வாடும் எளிய மக்களின் எதிர்காலத்தை தேடிக் கண்டு சொன்னவர், மார்க்ஸ்.

அப்படி என்னத்த தாங்க சொன்னார் அந்த மார்க்ஸ்?

நான் படிக்குற காலத்திலேயே எனக்கு இந்த கேள்வி மனசுல வந்திருச்சு.. உலகத்திலேயே மிகப்பெரிய மக்கள் சக்தி கொண்ட என் தேசம் ஏன் முக்கள் வாசிப்பேர் முழு நேரம் உழைச்சும் சாதாரண வாழ்க்கை நடத்துரதுக்கே அன்றாடம் தள்ளாடுறான்?

சில நாட்களுக்குமுன் எதோ வடக்கத்திய பெயர் கொண்ட விண்கலம் கிளம்புவதை பார்த்து வாழ்த்துத் தெரிவிசார்னு நவபாரதப் பிரதமர் நரேந்திர மோடியப் பத்தி சொன்ன அதே செய்தியில் தானே,. பால் விலை, ரயில் கட்டணம், எரிவாயு விலை உயர்வு என எல்லாத்துக்கும் விலை ஏறுனத நெனச்சு எல்லாரும் இடிஞ்சுபோய் இருக்கோம்ங்கற செய்தியும் வந்திச்சு..?

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), பணவீக்கம் (inflation), தனியார்மயம்(privatization), தாராளமயம் (liberalization), உலகமயம் (globalization), வேலைவாய்ப்பு பெருக்கம் (employablity) என்று ஏதேதோ சொன்னாலும் நம்ம ஊரு முத்துசாமியும் மாரியம்மாவும் 75 வயசா உழைச்சு உழைச்சு இன்னும் கட்டிட வேலைக்கு போய்தான் கால்வயித்து கஞ்சி குடிக்கணும்னா? நீங்க சொல்ற பொடலங்கா வளர்ச்சியெல்லாம் பொய்யா? இல்ல எங்களுக்கு மட்டுமான மாயையா?
ஐந்தாண்டு ஐந்தாண்டு திட்டமா போட்டு, இன்னும் எத்தனை ஆண்டுகள், நாங்க காத்து கெடக்குறது? அப்படின்னா., வளிர்ச்சி எல்லோருக்கும் மானது இல்லையா? யாரோ சிலருக்குத்தான? உடல் பெருத்தா, ஒட்டுமொத்தமா பெருகணும், சில எடத்துல மட்டும் பெருகுணா அதுக்கு பேர் கட்டி, அது வியாதி. அறுத்துவிட்டு ஆபரேஷன் பண்ணினாதான் உயிரக்காப்பாத முடியும். அதுபோல வளர்ச்சி எல்லாருக்கும் இல்லேன்னா தேசம் நாசமாகிடும் இல்லையா? அப்போ அடிப்படை கட்டுமானதுலையே பிரச்சனை இருக்கு? இதையெல்லாம் நான் தெரிஞ்சிகிட்டது மார்க்சியதுல  தாங்க.

அந்த அடிப்படை கட்டுமானப் பிரச்சனை என்ன? அதன் இயக்க விதி என்ன? என்பதையெல்லாம் விஞ்ஞானப்பூர்வமா, வரலாற்று பின்புலத்தைஎல்லாம் வெச்சு ஆய்ந்து சொன்னது தான், மார்க்ஸ் இந்த மனித இனத்திற்கு தந்த பெருங்கொடை.

மூலதனம் (capital)உழைப்புச்சக்தி (labour)  இவ்விரண்டிற்கும் உள்ள இயக்கப்போக்கே சமூகத்தில் பொருளாதார அரசியல் நிலைகளை உருவாக்குகிறது என்கிறார் மார்க்ஸ்.

மூலதனம் (capital) மட்டும் வைத்துக்கொண்டு உழைக்காமல் இருக்கும் ஒரு கூட்டம்,  உழைப்புச்சக்தி மட்டும் வைத்துக்கொண்டு உழைத்துக்கொண்டே இருக்கும் ஒரு பெருங்கூட்டம். மார்க்ஸின் பார்வையில் ஒன்று பாட்டாளி வர்க்கம் மற்றொன்று முதலாளி வர்க்கம்.

ஆதிகாலத்தில் எல்லோரும் சமம் என்ற பொதுவுடைமையில் இருந்து, குழுத்தலைமை என்ற நிலைக்கு வந்து , பண்ணையார் – கூலி, ஆண்டான் – அடிமை என்ற பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்று சுரண்டலும் அடிமைத்தனமும் சூட்சமமாக பொதிந்து கிடக்கும் இந்த முதலாளித்துவம் (capitalism) மற்றும் அதன் வளர்ச்சியான ஏகாதிபத்தியம் (imperialism) அஆகிய அமைப்புகளுக்குள் நாம் இன்று இருக்கிறோம்.

பண்டமும்( goods)  பரிவர்த்தனையும் (exchange) என்று தொடங்கி, இன்றைய பொருளாதாரச் சுரண்டல் மற்றும் அதன் எதிர்காலத் தாக்கம் ஆகியவற்றை தனது மூலதனத்தில் தோலுரிக்கிறார் மார்க்ஸ்.

நான் உப்பு வைத்திருக்கிறேன் ! உன்னிடம் சர்க்கரை உள்ளதே! சரி இரண்டயும் மாற்றிக்கொள்வோம் என்று உருவானதே பண்ட மாற்று முறை (barter system). இதில் உப்பும் சர்க்கரையும் மாற்றி கொண்டவுடன் பரிவர்த்தனை முடிவடைகிறது. மனிதத்தேவை தீர்கிறது. யாருக்கும் பிரச்னை இல்லீங்க! ஆனா, காலப்போக்கில் பரிவர்த்தனையை சுலபமாக்குரேன்னு வந்த இந்த “பணம்” (money) , வந்த வேலைய விட்டிட்டு வேற வேலைய செய்ய ஆரம்பிச்சிருச்சு.

உப்பு (C1) –> பணம் (M) –> சர்க்கரை (C2) என்ற நிலை,

பணம் (M) – உப்பு (C) – அதிகப்பணம் (M2) என்றாகிவிட்டது. பணத்தை கொடுத்து உப்பை வாங்கி பதுக்கிவைத்து அதிகப் பணத்திற்கு விற்கப்பட்டது. இங்குதான் சமூகத்தை ஆட்டிப்படைக்கும் உபரிப்பணம் உருவாகியது என்கிறார் மார்க்ஸ்.

பணம் (M) – அதிகப்பணம் (M1) என்ற அந்த செயல்பாட்டை பிரதேயகமாக கொண்ட செல்வத்தைத்தான் “ மூலதனம்” (capital) என்று குறிப்பிடுகிறோம்.

C – C1 ஆகா முடிவுபெற்று வந்த பரிவர்த்தனை, M– C- M1 என்ற முடிவே இல்லாமல் பெருகும் வளரத்துடிக்கும் பரிவர்த்தனையாக மாறியதே எல்லாவற்றிற்கும் காரணம்.

சரி இப்போ சிம்பிளா சொன்னா.. நீங்க பேராண்மை படம் பாத்துருக்கீங்களா ? அதுல ஜெயம் ரவி மாணவிகளுக்கு பாடம் எடுக்குறது போன்று ஒரு காட்சியில் மிகச்சிறந்த முறையில் பொதுவுடைமையை எளிமையாக விளக்கியிருப்பார் இயக்குனர் தோழர்.ஜனநாதன். யூடியூபில் (youtube) உள்ளது அந்தக்காட்சி தவறாமல் பாருங்கள். எளிமையாப் புரியும்.. அடுத்த கட்டுரையில் இன்னும் ஆலாமா  மார்க்சியத்த பத்தி பேசலாம்.

உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது, “சரி அதுக்கு எதுக்கு “ நான் சிகப்பு மனிதன் னு விசால் படத்தலைப்ப வெச்சேன்னு தானே கேக்குறீங்க?”

20140426_132553
சிகப்பு தான் பாஸ், பாட்டாளிகளின் நிறம்.!

சிகப்புதான் பாஸ், உழைப்பின் நிறம்..!

சிகப்புதான் பாஸ், எல்லோரும் சமம் என்கிற சமதர்மத்தின் நிறம்..!

அதனால தான், “நானும் சிகப்பு மனிதன்..!”

சரி..! அந்த பேராண்மைக் காசிய மறக்காமல் பாருங்க..!

அதுலேர்ந்து அடுத்த எபிசோட ஆர்ரம்பிப்போம்..!

 >>home

 

 

 

Comments
  1. muthukumar says:

    Idhil yelimaiyaaga solapatuladhu.Panakaarargalukaaga thirakkapatta kadhavugalai patri…

Leave a comment