பசி! பசி!

Posted: April 30, 2016 in Uncategorized

Handwriting-007.jpg

குத்துயிரும் கொலையுயிருமா கெடக்கு! முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன்.

தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன்.

தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.

இரண்டாவது மாடியில அடிக்கிற வெயில் அப்படியே அறைக்குள்ள இறங்கும். இந்த சூட்டுல நாங்க தாக்குப்பிடிக்கிறதே மண்பாண்டத் தண்ணிய குடிச்சும், ஸ்ப்ரே பாட்டில்ல தண்ணிய ஊத்தி மூஞ்சில அடிச்சுகிட்டும் தான்.

சன்னல் பக்கமா வெயில்ல வெச்சு, அப்புறம் அது பக்கத்துல சேரைப் போட்டு நிழல்ல வெச்சு, மல்லிய போட்டு வளராம அப்றமாத்தான் வெந்தயம் போட்டேன். இதுவும் இனி எந்திரிக்க முடியாய்துனு தெரிஞ்சு, இப்போ புதுசா வெந்தயத்த எடுத்துட்டு வந்து நாலு பாட்டிலையும் போட்ருக்கேன். இதுவாச்சும் வளரனும். பாப்போம்.

நெனைச்சு பாக்றேன் ஆச்சர்யமா. இத்துனூண்டு பாட்டில்ல, ஒரு செடிய நம்மால வளர்க்க முடியலையே, விவசாயிங்க என்ன பாடுபட்டு நமக்கு பொங்கித் திங்க அரிசியையும், காய்கறிகளையும் தர்றாங்க. வள்ளுவர் சொன்ன மாதிரி உழுதுண்டு வாழ்வரே வாழ்வார், நாமெல்லாம் அவங்கள தொழுது பின்செல்லத்தான் வேணும்.

பிறந்தநாள் பரிசாக தங்கர் பச்சானின் ‘சொல்லத் தோணுது’ புத்தகத்தை தோழர். காயத்திரி தந்தாங்க.

“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன் “ என்று ஆப்ரகாம் லிங்கனின் வாசகம் அதில் எழுதியிருந்தது.

வாசிப்பிற்கும் இன்றைய சமூகத்திற்கும் உள்ள இடைவெளியை எண்ணி வருத்தம் தான் வருகிறது. அந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டிய தோழர். பாலா சொன்னார், ‘விவசாயம் பற்றியும் கல்வி பற்றியும் தான் நிறைய எழுதியிருக்கார் போல இந்த புத்தகத்தில்’ என்றார். நேற்றுத்தான் அப்புத்தகத்தை வாசித்து முடித்தேன்,

விவசாயமும் கல்வியும் புறந்தள்ளப்பட்டு உழவனும் ஆசிரியனும் இந்தச் சமூகத்தில் கடைநிலை அங்கீகாரம் கூட இல்லாமல் நிர்க்கதியாக நிற்பதை அந்த புத்தகம் சுட்டிக்காட்டுகின்றது. தங்கர் பச்சான் இயக்கம் போலவே எதார்த்தமாய் அவர் எழுத்துக்கள்.

அந்த நிர்க்கதியை ஒரு ஆசிரியனாக என்னால் முழுவதுமாக உணர முடிகின்றது. பயிர் வாடுவது எப்படி உழவனுக்கு வலிக்குமோ, அதுபோல உழவன் வாடினால் அது இந்தச் சமூகத்திற்கு வலித்திருக்க வேண்டும்.

‘ஆசு’ என்றால் ‘குற்றம்’, ‘இரியர்’ என்றால் ‘களைபவர்’ அல்லது ‘ பொறுத்துக் கொள்ளாதவர்’ என்று அர்த்தம். சமூகத்தில் குற்றங்கள் இல்லாமல் இருக்கும்படி உயர்ந்த பண்புகளைக் கொண்ட மனிதர்களை படைக்க வல்ல பணியைச் செய்யும் ஆசிரியரின் நிலை இன்றைக்கு கேலிக்குரியதாக ஆக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலை ‘அறம், ஒழுக்கம், மற்றும் விழுமியங்கள்’ அற்ற இழிவான வாழ்கையை வேண்டி சீர்கெட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் வேறு எதை நமக்கு உணர்த்துகின்றது?

பொருளாதாரத்தில் பின்தங்கி, அடிப்படை வசதிகளை பெறுவதற்கே வாழ்நாள் முழுவதும் போராட வேண்டிய நிலையில் ஆசிரியனை நிறுத்திவிட்டு, எந்த அடிப்படியில் நோபல் பரிசுகளை எல்லாம் இந்த தேசம் எங்களிடத்தில் எதிர்பார்கின்றது?

உலகத்தில் தலை சிறந்த நூறு கல்வி நிலையங்கள் என்னும் தர வரிசையில்  நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்கள் கொண்ட நம் தேசத்து கல்வி நிலையங்கள் வரவில்லை என்று எப்படி நம்மால் கேட்க முடிகின்றது?. ஆசிரியன் இல்லாமல் இதில் ஒன்றும் நிகழாது.

வெறும் கையைப் பிசைந்துகொண்டு, வேட்டியோடு ஆசிரியர்களை நடுரோட்டில் நிற்கவைத்து விட்ட நாம், அந்த வேட்டியையும் உருவிக்கொண்டு கை ஏந்துகின்ற நிலைமையில் தான் உழவர்களை விட்டுவிட்டோம்.

ஒன்று மட்டும் உறுதி. வயிற்றுப்பசி தீர உழவனைத் தேடியும், அறிவுப் பசி தீர்க்க ஆசிரியனைத் தேடியும் இந்தச் சமூகம் கை ஏந்தி நிற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அன்றைக்கு நம்மிடத்தில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேதியல் விஷம் நிறைந்த காய்கறிகள் இருக்கும். வேறு வழியின்றி ஆசிரியர் பணிக்கு வந்து வாழ்கையை ஒட்டிக்கொண்டு இருக்கும் மனிதர்களே அறிவுத் தேடலோ, அறநெறியோ இல்லாமல் நம்மிடத்தில் இருப்பார்கள். இறக்குமதி செய்த பொருட்கள் வாங்க முடியாத விலையிலும், நல்ல ஆசான்கள் காணவே முடியாத நிலையிலும் தான் இருப்பார்கள். தலை சிறந்த ஆசிரியர்கள் எல்லாம் தலை விதியே என்று வேறு துறைகளுக்குப் போய்விடுவார்கள்.

அந்நிலையில் வயிற்றுப் பசி, அறிவுப்பசி என்ற இரண்டு பசியின் கொடுமையாலும், இந்தச் சமூகம் போடும் ‘பசி! பசி.!’ என்ற கூக்குரல் இப்போதே  எனக்கு கேட்கிறது. அந்நிலை ஒரு கேட்ட கணவாகப் போனால் நாட்டுக்கு நல்லது.

ரொம்ப காட்டமா பேசிட்டேனோ? ஆமாம்தான்.

நான் மாட்டும் தனியா என்ன செய்ய முடியும்னு நீங்க கேக்குற கேள்வி எனக்கு புரியுது.

பெருசா ஒன்னும் எங்களுக்கு பண்ண வேணாங்க.

இன்னிக்கி வெளில போறப்போ தாகம் எடுத்தா, விஷம்னு தெரிஞ்சும் பந்தாவுக்காக பணத்த வீணாக்கி அந்த பன்னாட்டு குளிர்பான குப்பைகள குடிக்காம, மொட்ட வெயில்ல நமக்காக ரோட்டோரத்துல உட்கார்ந்து இளநீரும் நொங்கும் விக்குற விவசாயிகிட்ட சில்லரத்தனமா சில்லர பேரம் பேசாம, கேக்குற காசக் குடுத்து இளநீரும், நொங்கும் வாங்கிக் குடீங்க.

அப்படியே ரோட்ல எதிர்ல உங்க வாத்தியார் வந்தார்னா, வானத்தையும் பூமியையும் செவுத்துல வெள்ளிகிழமை ஒட்டின சினிமா போஸ்டரையும் பாக்ரமாத்ரி, தெரியாத மாதிரி நடிக்காம, மரியாதையா ஒரு வணக்கம் மட்டும் சொல்லுங்க. அந்த நொடிப் பொழுதாவது அவர்கள் அங்கீகரிக்கப் பட்ட உணர்வு வரட்டும் அவர்களுக்கு.

பாருங்களேன். நேரத்துக்கு சரியாய் வந்துட்டாங்க. வேறயாரு திருவாளர். அணில் தான். அணில்னா மனுசன்னு நெனைக்க வேண்டாம். நம்ம தென்ன மரத்தது அணில் தான். தோழர். பாலா தினமும் அணில்களுக்கு நிலக்கடலை வைப்பார். இன்னிக்கு அவர் வரல, அதான் உரிமையோட எட்டிபாக்றதும் குதிச்சு குதிச்சு கடல கேக்ரானுங்க. சரி நான் போய் கடலை வெச்சு அவங்களை கவனிக்குறேன்.

நான் சொன்னத நீங்க கவனத்துல வெச்சுக்கோங்க மறக்காம. சரியா?.

______________________________________________________________

ரியாஸ் அகமது கலிலூர் ரஹ்மான்

நன்று கருது | நாளெல்லாம் வினை செய் | நினைப்பது முடியும்

Advertisements
Comments
  1. Kumaran says:

    Arumaiyana Padhivu….Uzhavargal/aasiriyarkalai madhikkum kalam vehu viraivil varum enbadhil maatram illai…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s