கற்பித்தேன்..! கற்கிறேன் ..!

Posted: June 25, 2014 in Uncategorized


IMG-20140621-WA0007

“குட் மோர்னிங் குரு..!” தினமும் காலையில் என் மொபைலில் வந்து தவறாமல் விழும் தீபிகாவின் மெசேஜ்.

“நற்காலை அய்யா” என்று வாட்ஸ் அப்பில் காபி அனுப்புவார் விஜயகுமார்.

இப்படி எத்தனையோ மறவா நேசத்தை தாண்டித்தான் ஒரு ஆசிரியனின் நாள் தொடங்குகிறது. எல்லோரும் நேற்றைய மாணவர்கள். இன்று, உலகில் ஏதேதோ மூலையில் வெவ்வேறு பொறுப்புக்களில் புதிய அடையாளங்களோடு, என்றும் என் பழைய மாணவர்களாய் இருக்கிறார்கள்.

உண்மையில் இவர்கள்தான் எனக்கு ஆசிரியர்கள்.

தோய்வாகும் போது உற்சாகமூட்டி, தோல்வியடையும்போது ஊக்கப்படுத்தி, மகிழ்ச்சியடையும்போது அதை இரட்டிப்பாக்கி, இன்றும் என்னை வழிநடத்துபவர்கள் இவர்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பாணி. குறுந்தகவளோ, வாட்ஸ் அப்பில் சாட்டோ (chat), முகபுத்தகத்தில்(face book) கம்மேண்டோ, எதாவது ஒரு வழியில் தொடர்பு வட்டத்திலேயே இருந்து பாடம் கற்பிக்கும் இவர்கள்தான் என் வாத்தியார்கள்.

“குருஜி.! ப்ரீ ஆ ? இல்ல பான்ஸ்(fans) ஓட பிஸி யா?” எனக்கலாய்க்கும் IAS.கார்த்திகா

“அண்ணா! ஸ்ரீலங்கா கெளம்பிட்டேன்.வரும்போது என்ன வாங்கிட்டு வரட்டும் உங்களுக்கு? ஸ்ட்ரிக்ட்லி நோ GUNS “ என்று வாட்ஸ் அப்பில் கதைக்கும் தொழிலதிபர். சரண்யா.

“தலைவரே! எப்போ இயக்கத்த ஆரம்பிக்குறோம்? ஒரு முப்பதிஞ்சு வயசுக்குள்ள எல்லா ரேச்போன்சிபில்டியையும் (responsibilities) முடிச்சிட்டு வந்துடறேன்” என்று பிளான் போட்டு, பாதி அரசியல் வாதியவே ஆகிட்ட “தொழிலதிபர் .தயானந்து.”

“சகோ! அம்பேத்கார் தொகுப்பு வாங்கபோரேன் சகோ.! உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க “ என்று நேற்று கேட்டுவிட்டு போன புரட்சியாளர்.விக்னேஷ் சே குவாரா.

“சார். எனக்கெனவோ ஜெயமோகன் மேல தப்பிலைன்னு தான் சார் தோணுது..! ஆனா எஸ்.ரா நெறைய நல்ல விஷயம் பண்றார் சார்.” என்று இலக்கியத்திலும் சமூகத்திலும் தன்னை தேடும் ஜெயமுருகன்.

“எப்போ சார் ! மீடியா பக்கம் வறீங்க ? புதிய தலைமுறை உங்களுக்காக காத்திட்டு இருக்கு.” என்று எடாகுடமாக எப்போதும் என்னை டரியலாக்கும் மெட்ராஸ்.முத்துக்குமார்.

“அண்ணா..! எப்டி இருக்கீங்க? பாங்க்ல ஹெவி வொர்க். சண்டே பிரான்சு நால, வீக் டேல தான் லீவ் எடுத்துக்கணுமாம், சண்டே அல்சோ வொர்க் ” என்று சொன்ன ரீசெண்டா தங்கை ஆன உமா மகேஸ்வரி, ACS.

“வருங்கால தமிழகமே ..! இளைங்கர்களின் எழுச்சியே..!” என்றெல்லாம் FB கம்மேன்ட்சில் சிரிப்புகூடும் ஈரோடு.ராஜ்குமார்.

IMG-20140621-WA0008“பைய்யா.! ஹாப்பி சண்டே!” என்ற பத்மப்ரியா. “பாலன்ஸ் சீட் கண்டுபுடிச்சது யாரு பைய்யா.!?” என்று ஷாக் கேள்வி கேட்டு மெசேஜ் அனுப்புன நந்தினி.ஜிஜோ.

“சார்! வீட்டுக்கு சாப்ட வாங்கனு..!” கூட்டிடுபோய் அம்மாகையாள செம அசைவ விருந்து வெச்ச காரைக்குடி.சரண்யாக்கா.

“கவிதை தொகுப்பு எழுதீர்க்கேன் சார்.! உங்கள்ட தான் காமிக்கணும் பர்ஸ்ட்..! காலேஜ் ஆரம்பிச்சதும் வந்து பாக்றேன் சார்..” என்று செய்தி அனுப்பிய தமிழ் மன்றம். சையத் இப்ராஹும்.

“கெஸ்ட் லேக்ட்ச்ருகாசும் வரேன்னு சொல்லியே வராம எமாதிடீங்க?” என்று பேசும்போதெல்லாம் கேட்கும் EEE.சந்தனா  தேவி அண்ட் கோ.!

எத்தனை எத்தனை உரையாடல்கள்.. கற்பிதங்கள் , ஒரு ஆசிரியனுக்கு..?!

“சோனாவின் மைகேல் ஜாக்சனே..! நாளைக்கி எனக்கு அறியர் எக்ஸாம்.. பாஸ் பண்ணி விட்டா நெக்ஸ்ட் month யே மேரேஜ்.. பாஸ் பண்ணி விடுங்க பாஸ்” என்று பேஷ் புக்குல தகவல் அனுப்புன பாக்ஸ்ர்.பிலால்.

“எப்படீங்ங் சார் இருக்கீங்க..” என்று திடீரென்று பேஷ் புக்குல கொங்கு தமிழில் தகவல் அனுப்பும் ஜெயா, எஷோதா.

காரணமே இல்லாமல் பேசாமல் இருந்து “ சாரி பார், எவரிதிங் சார்.! ஷால் ஐ மீட் யூ நவ்?”  என்று வந்து பேசிய மாஸ்டர். அமரின்.

நெறைய நேரம் பேசி இருக்கா விட்டாலும், “ரியாஸ் சார் காகத்தான் இனிக்கி வந்தேன் என்று farewell dayல சொல்லி நெகிழ வைத்த பால்.நியூட்டன்.!

“சார். ப்ளூட் லாம் ஈஸிதான் சார்.! என்று ஒரு ப்ளுட் வாங்கிவந்து, என்னையும் ப்ளூடிஷ்டா இமேஜின் பண்ணவைத்து, “ காலைலியே, அந்த கருமத்த எடுத்து கத்த வெக்குரியா” னு அம்மா கிட்ட தினமும் திட்டு வாங்க காரணமான காரணகர்த்தா ப்ளூட்.கௌரி ஷங்கர்.

இன்னும் எத்தனையோ தயாக்கள், அமரின்கள், கத்திரிக்காகள், கூட்ஸ்கள், சரன்யாக்கள்.. வேறென்னென பெயர்களிலோ? காலம் இன்னும் நிறைய பேரை காணத்தான் போகிறது..!

எதிர்காலத்தை பற்றிய பெருங்கனவு கொண்டவர்களாய்…

புத்துணர்வும் வேகமும் பெற்றவர்களாய்…

சமுதாய அழுக்குகளில் இன்னும் கரை படியாதவர்களாய்..

ஆசிரியனுக்கு கற்றுகொடுப்பவர்களாய்… வந்துகொண்டே இருப்பார்கள்.

எழுத்துக்களால் குறிப்பிடாமல் விட்டுப்போனவர்கள் இருக்கலாம், நினைவுகளால் என்றைக்கும் என் வாழ்வில் நிறைந்தவர்கள் பலர், என்று எழுதிகொண்டிருக்கும் போதே வந்துவிட்டது குறுஞ்செய்தி ..!

………….

பீப்…பீப்…

“சார். எஷ்டர்டே ஒன்லி ஐ சென்ட் தி கொரியர் சார்“ – சொனா. ஜோஷ்பின்.ஜோ

பீப். பீப்..

“கடவுள் தூணிலும் இருக்கிறார். துறும்பிலும் இருக்கிறார், என்றீர்கள். எங்கள் வீட்டு தூணில் வசித்தால் கொஞ்சம் வாடகை வாங்கித்தாருங்கள், அதைக் கொண்டு நான் வறுமையை போக்கிகொள்கிறேன் – சோனா. தமிழ் .காயத்ரி”

சரி.. இருங்க ரிப்ளை பண்ணீட்டு வந்துடரேன்..!

கற்பித்தேன்.. கற்றுகொண்டே இருக்கிறேன்…

தோழமை… தொடரும்..!

Advertisements
Comments
 1. Migavum arputham!! Arumaiyana pathivu 🙂

 2. muthukumar says:

  வெகு நாட்களுக்கு பிறகு ஒரு ஆத்மார்த்தமான பதிவு ….

 3. vignesh che says:

  Sir romba nalla iruku sir. unga vari ennai puratchiyalarnu sollumbothu nijamave yenaku periya santhegam varuthu sir. Unga varthaiya unmai yakuven sako

 4. Naveena says:

  thumbs up… 🙂

 5. sir, super ah iruku..!! varungala ezhuthalarukana 10 poruthamum pakkava iruku…

 6. “ஆசிரியரைத் தவிர இந்த உலகத்தில் மனிதர்களை அதிகம் படித்தவர் யாரும் இல்லை “என்பதற்கானச் சான்று உங்களின் பதிப்பு…..அருமையான கட்டுரை

 7. really ur grt ji…U made the flash back as the real in ur sentence… heartly touch….!!!!

 8. P Sree Gayathiri says:

  Great Writing! Wish I could have been ur student.All the best, sir. Way to go!

 9. Padma Priya Rajarathinam says:

  Am very happy to see this bhaiya..,😊

 10. Nandhini says:

  Super thala…one of d best teacher in our college life..

 11. Sureshbabu Lakshmanan says:

  Very nice one sir ! It encourages me to become a lecturer in the future 😉😊

 12. Venkatakrishnan says:

  நீங்கள் மாணாக்கர்களை நேசிப்பதால் அவர்களும் உங்களை அளவு கடந்து நேசிக்கிறார்கள்.அருமையான பதிவு

 13. Silambarasan Murugesan says:

  மிக அருமையான தொகுப்பு தோழரே 👌👌👏👏
  I enjoyed your teaching and learning

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s