யாமறிந்த மொழிகளிலே …!

Posted: March 6, 2014 in Books & Movies, Great Talks
Tags: , , , , , ,

 

Tamil mandram

நேரம் சரியாக மாலை 5.30 மணி. மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் அரங்கத்தை ஒழுங்கு செய்துகொண்டிருக்க, தமிழுக்காக கூடிய அந்தத் திரளான கூட்டம் , பேச்சாளர் மற்றும் நிர்வாகிகள் வந்ததைக் கண்டதும் ஆர்ப்பரித்தது.

எப்போதும் சோனா தமிழ் மன்றத்தின் கலை விழாவிற்குத் தானாகவே கூடும் கூட்டத்திற்கு முதல் காரணம், அங்கு பேசவரும் பேச்சாளர்கள், ஒரு மணிநேரம் பேசினாலும், அது பொழுதைப் போக்குகிற பேச்சாக இல்லாமல் பொழுதை ஆக்குகிற பேச்சாகவே இருக்கும் என்பதால் தான். தமிழருவி மணியன், முனைவர்.கு.ஞானசம்பந்தன், பட்டிமன்றம் ராசா, இவர்கள் வரிசையில் இந்தமுறை சிறப்பான துடிப்பான பேச்சை நம் நெஞ்சில் நிறுத்திச் சென்றவர் “திரு.பாரதி கிருஷ்ணகுமார்.

20140220_173508சமூக அவலங்களை, ஏற்றத்தாழ்வுகளை, தன் எழுத்தாலும் பேச்சாலும், ஆவணப்படங்களாலும் பதிவுசெய்யும் இவரின் சேவைக்கு இவரது படைப்புகளே சாட்சியம். “ராமய்யாவின் குடிசைஎன்ற ஆவணப்படம் இவர்படைப்புகள்  அத்தனையிலும் சிறந்த கருவைக்கொண்டது என்றே நான் சொல்வேன்.

யாமறிந்த மொழிகளிலே…என்று பாரதி போற்றிய தமிழைப் பற்றி பேச, பாரதி க்ரிஷ்ணகுமாரைத் தவிர பொருத்தமானவர் இருக்கமுடியாது. எல்லோருக்கும் ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் தந்த விடயம், அவர் தன் பேச்சை தொடங்கும்பொழுது, தான் ஒரு முன்னால் மாணவனாக இந்த சோனா குழுமத்திற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக சொன்னதுதான். சோனா குழுமத்தின் அங்கமான மதுரை தியாகராஜர் பள்ளியில் தான் பயின்ற தமிழும், தமிழாசிரியர்களும் தான் தன் தமிழறிவுக்கு காரணம் என்றவுடன் கூடியிருந்த இந்நாள் மாணவர்கள்,அந்த முன்நாள் மாணவரை கரவொலியால் பாராட்ட மறக்கவில்லை.

உலகிலேயே தொன்மையான மொழிகள், என்று விரல்விட்டு எண்ணப்படும் மொழிகளுள் எழுத்து வடிவத்தை இத்தனை ஆண்டுகளாக அழியாமல் வைத்திருக்கும் தொன்மையான மொழிகள் இரண்டு. ஒன்று சீனம். மற்றொண்டு நம் தாய்மொழி தமிழ். அதிலும் சீன எழுதுத்துக்கள் வடிவங்கல்தானோ அன்றி முறையான எழுத்துக்கள் என்று கூற முடியாது. அப்படி பார்க்கும் பொழுது சீனத்தை புறந்தள்ளிவிட்டால் தமிழ் ஒன்றுதான் இத்தனையாயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் கொண்டு விழங்குகிறது என்று அவர் சொன்னதும் ஆர்பரித்தது கேட்போர் கூட்டம்.

ஹீப்ரூ, சமஸ்கிருதம், போன்ற மொழிகள் எதோ ஒரு வகையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் அவை தத்தம் கடவுளர்களால் பேசப்பட்ட மொழிகள் என்பதால்தான். ஆனால், முருகனே வந்து தமிழால் என்னைப்பாடு என்று அவ்வையிடம் கேட்ட பெருமைக்குரியது, நம் தாய்மொழி என்றார். தமிழின் பெருமை மட்டும் பேசாமல், தமிழ் கூறும் ஒழுக்க நெறியும், வாழ்வியலும் அவரது பேச்சில் பிரதானமாக இருந்தது. கடவுளுக்குகூட உலகைச் சுற்றிவந்து அளக்க நெடுந்தூரம் தேவைப்பட்டதாம். அய்யன் வள்ளுவனுக்கு ஒன்னேமுக்கால் அடியே போதுமானதாய் இருக்கிறது, என்று திருக்குறள் காட்டும் நன்றிகளை பட்டியலிட்டார்.20140220_173955

எட்டு மொழிகளை கற்று அறிஞரான பின்புதான், தன் தாய்மொழியை பாரதி “ “தமிழ் மொழிபோல் இனிதானதை எங்கும் காணோம்” என்று போற்றிப் பாடினார், என்று மொழியின் பெருமையை உணர்த்திய அவர், தாய்மொழி மட்டுமல்லாது ஏழு மொழிகளை பாரதி கற்றதன் காரணத்தையும், அறிவுத்தேடலின் அவசியத்தையும், புத்தக வாசிப்பின் தேவையையும், இன்றைய சூழலில் ஆங்கிலம் மற்றும் வேற்றுமொழி கற்பதன் அவசியத்தையும் திறம்படக்கூறியது எல்லோர்க்கும் ஏற்புடையதாய் இருந்தது.

தாயைப் போன்று தாய் மொழியை நேசி, என்பதை உணர்த்த அவர் சொன்ன உதாரணம், எல்லோர் கண்களிலும் நீர்பெருக்கெடுக்கச் செய்தது என்றால் அது மிகையல்ல.

“அ” என்ற உயிர் எழுத்தும், “ம்” என்ற மெய்யெழுத்தும், சேர்ந்தால் “மா” என்ற உயிர்மெய் பிறக்கும். அதுபோல.. தன்  உயிர்கொடுத்து , தன் உடலை உறுக்கி தன் சக்தியால் நமக்கு உடல் கொடுத்து, உயிரும் உடலும் கொண்ட மனிதனாக இந்த உலகில் நம்மை உலவச்செய்த நம் அன்னையை போற்றி, அம்மா என்ற சொல்லை எல்லோரையும் உரக்கசொல்ல வைத்து அவர் அமர்ந்தவுடன், அரங்கம் எப்படி கரவொலியால் அதிர்ந்திருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞன் ஒருவன் எம்மவரின் பெருமையை உணர்த்தும் வரிகளை இந்த  உலகிற்கு சொன்னான். எப்போதும் தன்  பேச்சுத்திரனாலும் தலைமைப் பண்பாளும் எம்மைக் கவரும், கல்லூரியின் செயலாளர் திரு.தீரஜ்லால், அந்த வரிகளை சொல்லி அரங்கத்தை ஆர்பரிக்கச் செய்தார். அந்தவரிகள் இன்றைய சமூகத்தின் அதிமுக்கியத்தேவையாக உள்ளது.

“யாதும் ஊரே.. யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் வரிகள்தான் அவை. இதே வரிகளை அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது ஐரோப்பிய பாராளமன்ற வெள்ளிவிழாவில் பேசியபோது, அந்தக் காணொளியை கண்ட எந்தத் தமிழனாலும் உணர்ச்சிவயப்படாமல் இருந்திருக்கமுடியாது. இப்போதும் எங்களுக்குள் அதே உணர்வு.

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்…!

20140220_195121

 

Advertisements
Comments
  1. surendhar says:

    Its nice to hear once again thank u sir

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s