சே – ஒரு புரட்சி விதை..!

Posted: February 5, 2014 in Beautiful People, Politics
Tags: , , , , , , , ,

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை ; விதைக்கப்படுகிறார்கள்..!

தன்கள் தாய் நிலங்களில் , எந்த மக்களுக்காக போரடினார்களோ அவர்கள் நெஞ்சில்; அவர்கள் விதையாய் விடுதலைப் பொறியாய் விதைந்து முளைக்கிறார்கள். உலக வரலாற்றிலேயே, ஒரு இனத்தின் ஒரு தேசத்தின் மக்களுக்கல்லாது , உலக மக்கள் அனைவராலும் புரட்சி நாயகனாய், வழிகாட்டும் தலைவனாய் ஏற்கப்படிருக்கும் ஒரே “மனிதர்“, எர்னஸ்டோ குவேரா..!

ஆஸ்துமாவால் தான் அல்லல்பட்டாலும், அடிமைத்தனத்தை அழித்தொழிக்கப் புறப்பட்டு, கியூபாவிற்கு விடுதலை தேடித்தந்து, பொலிவிய மண்ணில் உலகப் புரட்சிக்காக விஹியாய் விழுந்தவர் “சே”. மோட்டார் சைக்கிள் பயணத்தில் லத்தீன் அமெரிக்காவின் வறுமை நிலையைக் கண்டு, அதற்கு காரனமாய் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அடியோடு அழித்தொழிக்கப் புறப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வீரர் சே.

மருத்துவராய், புரட்சியாளராய், அரசியல் அறிஞராய், அத்தனைக்கும் மேலாக மனிதராய் வாழ்ந்து, தான் வாழ்ந்த வாழ்க்கையை நம் அத்தனை பேருக்கும் பாடமாய் விட்டுச் சென்றிருக்கிறார், இந்த அர்ஜென்டினிய போராளி.

ஒருவேளை பிடல் காஸ்ட்ரோவிடம் ,சே தான் பிரிந்துசெல்ல அனுமதிக்கும் சத்தியத்தை வாங்காமல் இருந்திருந்தால்?

ஒருவேளை காங்கோவில் தான் நினைத்த வாறு புரட்சிப் படைகள் வெற்றி பெற்று, புரட்சி சுற்றியுள்ள நாடுகளுக்கு பரவியிருந்தால்..?

ஒருவேளை அந்த பொலிவிய ஆடு மேய்க்கும் பெண் , அவரும் அவரது கூட்டாளிகளும் சென்ற வழியை, அமெரிகக்கூட்டுப் படையினருக்கு தெரிவிக்காமல் இருந்திருந்தால்?

ஆடை கிழிந்து, கண்களில் பொலிவிழந்து, உடல் வற்றி “சே” பொலிவிய ராணுவத்திடம் மாட்டிய பின்னர், அவர்கள் இவரை கொலை செய்யாமல் அரசியல் கைதியாக வைத்திருந்தால்?

சே என்னும் மனிதர் நம்மிடையே இன்று வாழ்ந்து கொண்டிருந்திருப்பார். அனால் நிச்சயம் அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய அரக்கன் அழிந்திருப்பான். அதனால்தான் சே என்று உச்சரிதாலேயே இன்றும் சி.ஐ.எ விற்கு வயிற்றில் புலியை கரைக்கிறது. இன்றும் அவர்களின் அரசுக் கோப்புகள் சேவை பற்றி இப்படிச் சொல்கிறது “அவன் ஆபத்தானவன்.

இரண்டாம் உலகப்போருக்கு ஹிட்லர் என்ற இனப்பெருமையாளன் தலைமை ஏற்றான், வரலாறு தவறாகப் போனது.

மூன்றாம் உலகப்போர் என்ற ஒன்றிற்கு சே வித்திட்டார் என்ற நிதர்சனம் நிஜமாக நிகழ்ந்திருந்தால், இன்று “ஏகாதிபத்தியம்” அழிந்திருக்கும். மனித நேயம் மலர்ந்திருக்கும்.

சாகும் தருவாயிலும் தான் அடைத்து வைத்திருக்கப் பட்டிருக்கும் இடம் ஒரு பள்ளிக்கூடம் என்பதையறிந்து, அதை விடுதலையானால் புதிபித்து தருகிறேன் என்று மனித நேயத்தோடு தன எதிரிகளிடமே சொன்ன ஒரு மகத்தான மனிதர் சே.

சே வின் சுடப்பட்ட படம் மட்டும் பிடலுக்கு அனுப்பப்பட்டது.அவர் சே தான் என்பதை கியூபா உறுதிசெய்தது. எங்கே கொன்றார்கள்? என்ன செய்தார்கள் என்பதை சி.ஐ.ஏ. வும் அமெரிக்காவும் யாருக்கும் தெரிவிக்க வில்லை. தெரிந்தால்?அவரை புரட்சி நாயகனை இந்த உலகம் போற்றும் என்கின்ற பயம். ஆனாலும் அவரை இன்றளவும் புரட்சியின்  பொதுவான குரியீடாகதான் உலகம் போற்றுகிறது. இறந்த பிறகும் சவால் அமெரிக்கா அதிர்ந்துகொண்டுதான் இருக்கிறது.!

“அநியாயத்தை கண்டு வெகுண்டேளுந்தால் நீயும் என் தோழன்” என்றார் சே. அப்படி அநியாயத்தை அநீதியை கண்டு கொதிக்கும் ஒவ்வொருவரும் சே தான். அவர் கை, கால்கள், கண்கள் கொண்ட தனி மனிதனல்ல ; அவர் மனிதநேயத்தின் அடையாளம்.

யாருக்கும் தெரியாமல் பொலிவியாவில் அவர் புதைக்கப் படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறார்.

நீதிக்காக போராடும் ஒவோருவர் உருவிலும் அவர் உயிர்பெருகிறார்.!

 

 

Advertisements
Comments
  1. puratchi vithaka pattuvittathu ungal pathivin moolamaga! Che patri ellorukum puriyum vithamaga eluthi irukindreegal. Arumai.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s