தாயுமாணவன்..!

Posted: February 3, 2014 in Beautiful People
Tags: , ,

சீருடை அணிந்து , சீராகச் சென்றால் அவன் பள்ளி மாணவன்.. சிகரட்டோடு சீக்ரெட்டாக கைபேசியில் பேசிச்சென்றால் அவன் கல்லூரி மாணவன்.

இதுதானே நம் ஊடகங்கள் உருவாக்கியுள்ள பிம்பம்.?

மாணவர்களில் ஒவ்வொருவரும் நூறுவகை.. நான் கண்ட மாணவர்கள் அதில் வேறுவகை..!

வருங்காலத்தை எதிர்நோக்கி , நிகழ்காலத்தை தனதாக்கி காத்துக்கிடக்கும் நஞ்சில்லா தோட்டங்கள் அவர்கள். மாற்றத்திற்கு தயாராய் முன்னேற்றத்திற்கு முனைப்பாய் இருக்கும் அவர்கள், நிஜத்தில் ஆசிரியர்களின் ஆசிரியர்கள்..! ஒரு அடி நாம் நெருங்க பத்தடி நம்மை மாணவன் நெருங்குவான். இதையெல்லாம் சிந்தனை செய்யாது , யாரோ ஓரிருவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி குற்றம் குறைகள் சொல்லி வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம் பெருவாரியாக இருக்கத்தான் செய்கிறது. ஒட்டுமொத்தமாக அத்தனை மாணவர்கள் மேலும் பழிபோடுகிறது.

சிந்தித்துப்பாருங்கள்.. உண்மையில் இன்றைய ஆசிரியர்கள், நேற்றைய மாணவர்கள்..

இன்றைய மாணவர்கள்..நாளைய ஆசிரியர்கள். அவர்கள் கல்லூரியில் முறைப்படி கருத்தந்தாலும் சரி , கார்பரட் கம்பெனிகளில் ஊழியர்களை முறைப்படுத்தி கொண்டிருந்தாலும் சரி..நாமெல்லோரும் ஒரு வகையில் ஆசிரியர்கள், ஓராயிரம் வகையில் மாணவர்கள்..! இந்தபுரிதலும் இதற்கான அறிதலும் இருந்தால் மாணவரும் ஆசிரியரும் ஒன்றெனக் கலப்பர், குன்றென அவர்கள் அறிவை வளர்ப்பர்.

உலகில் மிகப்பெரிய புரட்சியெல்லாம் மாணவர்களால் தான் துவங்கப்படிருக்கிறது. அதில் புரட்சிசெய்து வரலாற்று நாயகர்களாய் பின்னாளில் வளம்வந்த புரட்சியாளர்களுக்கு பின்னால் ஒரு ஆசிரியரின் ஊக்கம் இருந்துவந்திருந்தது என்பதுதான் வரலாறு.

அப்படியான ஆசிரியனாய் ஆவதற்கு நம்மில் சிலருக்காவது இருக்கவேண்டும் விருப்பம். அதுவே நாம் இந்த சமூகத்திற்கு செய்யும் கைமாறு. சிறு சிறு துண்டுகளாக சிதரிகிடக்கும் நேர்மையான நெஞ்சங்கள் இணையட்டும்.கனவு நினைவாகும், நேர்மையான சமுதாயம் உருவாகும் என்று பறையட்டும். இன்று நம் மாணவன், நாளை அவன் மக்களில் ஒருவன். பின்பு மாற்றம் சாத்தியமே..!

உண்மையில் இப்படி சிந்திக்க, அந்தசிந்தனை எல்லாம் செயலாக்க ஒரு ஆசிரியனை மாணவர்கள்தான் வார்த்தெடுக்கிறார்கள், காலப்போக்கில்.

அப்படிப்பார்த்தால் , ஒரு ஆசிரியனை உருவாக்குகிற மாணவர்கள், உண்மையில் தாயுமாணவர்கள்..! 

Advertisements
Comments
  1. மாணவர்கள் பற்றிய அருமையான பதிவு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s