புத்தகம் பேசுது

Posted: February 1, 2014 in Books & Movies
Tags: , , , , , , ,

20140201_104652

“சுவாசிப்பை நிறுத்தும்வரை வாசிப்போம்…! ஒருமுறை அரசியல் கூட்டமொன்றில் பேச்சாளர் ஒருவர் இப்படிச்சொன்னார். அப்படி என்ன இருக்கிறது புத்தகத்தில்?என்ற கேள்வி என்னில் எழுந்து சில ஆண்டுகளே ஆகிறது.

அதன்பின் உணர்ந்தேன், “புத்தகம் பேசும்” என்று. மனித சிந்தனை வளர்ச்சியில் மகத்தான ஒரு ஊடகமாக , கருவியாக மனிதன் கண்டறிந்தது மொழியை. நம் மண்ணையும் மக்களையும் இணைக்கும் பெரும் பணியை செய்வது அவரவர் தாய்மொழிதான். அப்படிப்பட்ட தாய் மொழியை நாம் விட்டுக்கொடுக்கலாம் என்று ஒரு இடம் உண்டு அது புத்தகமும் இலக்கியமுமே ஆகும்.

இலக்கியம் என்றால்? நல்ல வாழ்கையை மேம்படுத்தும் புத்தகம் என்றே அர்த்தம். அப்படியான கருத்துச்செறிவு மிக்க புத்தகங்களை, வேற்று  மொழியில் தேடித்தேடி வாசித்தாலும் அதில் எந்த தவறும் இல்லை. போற்றினாலும் பிழையில்லை. புத்தகங்கள் வெறும் காகிதத்தால் அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் சிலருக்கு.நேரம் நிறைய ஓய்வாய் பெற்றவர்கள் செய்யும் வேலை என்ற எண்ணம் அவருக்கு.photo0102_002

வெகுசிலருக்குத்தான் புத்தகங்கள் வரலாற்றின் பாடங்கள். மேன்மையான மனிதர்களின் வாழ்விலிருந்து  நாம் பெரும் படிப்பினைகளுக்கான பிரதானங்கள். கோடான கோடி மனிதர்கள் வாழ்ந்து மறைந்த இந்த புவியில் நமக்காக பாடமாய் அவர்கள் விட்டுசென்ற சுவடுகள்தான் புத்தகங்கள். நம்மிடையே வாழும் மேன்மக்கள் நமக்காக அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பெட்டகம் தான் அந்த காகித பக்கங்கள்.

எனக்கிருக்கின்ற புரிதல் வரலாறு புரட்டிபோடப்பட்டது இதுவறை யுத்தங்களால்..! மற்றும் புத்தகங்களால்..!

வாசிக்கத் தெரியாதவனுக்கு, புத்தகம் சிறந்த காட்சிப்பொருள்..! வாசிக்கதெரிந்த மனிதனுக்கு புத்தகம் காட்டும் அவன் காணும் காட்சியெல்லாம் “பொருள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s