கேள்விகள்

Posted: February 1, 2014 in General

கேள்விகள்..! மானுட சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வித்தாய் இருக்கும் விதைகள்.

 

“ஏன்? என்று எதற்கும்  கேள்..எதற்கு என்று எவரிடத்தும் கேள்.!” என்றார், கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். அப்படி ஏன் எதற்கு என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்விகள் ஆயிரமாயிரம். சில சமயம் எதற்காக இதைசெய்கிறாய் ?என்று மற்றவர் கேட்கும் போதுதான் , நம் சிந்தனை எதை நோக்கிப் போகிறது , நமது செயல் எதன் காரணம் விளைகிறது என்ற உணர்வே நமக்கு ஏற்படும். அப்படி நாம் சிந்திக்கும் சில கேள்விகள் நமது பாதையை தெளிவாக்கும், நமது சிந்தனையைச் சீராக்கும்.

ஒரு முறை எனது நண்பர் ஒருவர் என்னிடம் எழுப்பிய கேள்வி, என்னை சிந்திக்கத் தூண்டியது.உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத புத்தகங்களை எல்லாம் வாசிக்கிறீர்களே ? அதனால் உங்களுக்கு கிடைக்கபோவது என்ன ? என்றார். கடினமாகத்தான் தோன்றியது அந்தக்கேள்வி. ஏனெனில் அதுபற்றி நான் அதுவறை சிந்தித்ததில்லை. பதிலும் கிடைத்தபாடில்லை.

ஆனாலும் நான் வாசிப்பை விட்டபாடில்லை. அந்தக்கேள்விக்கு நான் இன்றும் பதில் கூறவில்லை. ஆனால் அந்த நண்பர் இப்போது அவரின் கேள்விக்கான பதிலை உணர்ந்துகொண்டார்.

ஏன் படிக்கிறாய்? என்று கேட்ட அந்த நண்பர். இப்போது எதை முதலில் படிக்கணும், எப்படி வாசிப்பை ஆரம்பிக்கணும் என்று என்னிடத்திலேயே கேட்கிறார். கேள்விகள் தொடர்கிறது..! இப்போது அந்த முதல் கேள்விக்கான பதில் என் முன்னே தெரிகிறது.

முதலில் கேட்டது, விமர்சனக்கேள்வி..!

இப்போது நண்பர் கேட்டது, படிப்பினைக் கேள்வி..!

ஒரு மனிதனிடம் விமர்சனம் செய்யும் அளவில் இருந்து, அவனிடம் படிப்பினை பெறும் அளவிற்கு ஒருவனை உயர்த்துவது, உயர்த்தியது “ வாசிப்பு. இப்படி ‘ஒரு’ கேள்வி நம்மை சரியான பாதையில் செலுத்தாது..! நமக்கு நாமே எழுப்பிக்கொள்ளும் ஓராயிரம் கேள்விகளும் நம்மை முழுமையாக மேம்படுத்தாது.

பிறகு?

கேள்விகள் பிரதானம். நாம் அதற்காக தேடும் “பதில்கள்” தான் வாழ்கைக்கு “பிரயோசனம்”. அந்த தேடல்.. பதிலுக்கான நாடல்தான் நம்மை பரந்துவிரிந்த இப்புவியில் பயணிக்கச் செய்கிறது.

கேள்விகளே சில நேரம் கேள்விகளை உருவாக்குகிறது. கேள்விகளே சில நேரங்களில் கேள்விகளை மடிக்கிறது. கேட்டுக் கேட்டு கற்றுகொண்டால்தான் அது கற்றல்..! கேள்விகள்தான் நம் வாழ்க்கைக் குறிப்பை எழுதும் கற்கள்..!

மாணவன் கேட்கும் கேள்விதான் ஆசிரியரை செதுக்குகின்றது..

மக்கள் கேட்கும் கேள்விதான் ஆள்பவர்களை செதுக்குகின்றது..

மனிதன் கேட்கும் கேள்விதான் ஆண்டவனை செதுக்குகிறது..

கேள்விகள், ஒன்று நூறாய் வலுக்கடும்… நம் வல்லமையை பெருக்கட்டும்…!

 


Advertisements
Comments
  1. Naveena says:

    applause………….(Y) =

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s