எழுதுவதற்கு பேனா எடுத்தும் , என்ன எழுதுவது..? தெரியவில்லை.

இலக்கில்லா பயணம்தான் வாழ்க்கை என்பதை நான் உணர்கிறேன் இன்று.எங்கோ படித்து நினைவில் வந்து செல்கிறது.

இலக்கில்லா ஒருவனுக்கு வாழ்க்கை ஒரு நீரோட்டம்.நீரோட்டம் அடித்துச் செல்லும் ஓடமாக , வாழ்க்கை இழுத்த இழுப்பில் எல்லாம் சென்று , திக்கரியா இடத்தை நம்மில் கோடான கோடி பேர் அடைகிறோம்.

வெகுசிலரே, நிஜத்தில் “வாழ்கின்றனர்”.நாமெல்லாம் நிழலில்தானே வாழ்கிறோம்? வாசிப்பை நான் நேசிக்கதொடங்கிய காலம் முதல்,சொற்ப அளவே உள்ள நூல்களை நான் வாசித்திருந்தாலும்,அவை எனக்கு கொடுத்த அறிவு, சிந்தனை செழுமை ஏராளம்.

ஒரு சில தனி மனித வாழ்க்கை , அந்த நபர்களின் சிந்தனை தான் இவ்வுலகத்தில் மனித அறிவின், அதன் சக்தயின் பரிணாம வளர்ச்சியாக உறுப்பெற்று வந்துள்ளது. எண்ணி வியக்கிறேன் அந்த மாமனிதர்களை..

“மார்க்ஸ் என்று எங்கோ உலகத்தின் ஒரு மூலையில் பிறந்து, வறுமையை மட்டுமே சுவாசித்த அந்த மனிதன்தான் , ஏற்றதாழ்வுகளை துடைத்தெறியும் “விஞ்ஞான பொதுவுடைமையை தோற்றுவித்தளித்தார். நாற்பது ஐம்பது ஆண்டுகாலம் வெறும் நூலகத்திலேயே தன வாழ்நாளைக் கழித்து ,மூலதனம் என்ற வரலாற்று புரட்சி வாய்ந்த சிறப்புமிக்க சிந்தனையை , அறிவை மனித குலத்திற்கு தர அவருக்கு முனைப்பை ஏற்படுத்தியது எது?

மருத்துவம் தனது படிப்பாக இருந்தாலும்.ஆஸ்துமாவால் சிறு வயது முதலே கடினமான உடல் உபாதை பெற்றுவந்தாலும், சாமானிய மனிதனுக்காக வெகுண்டெழுந்து ‘சரித்திரமாக’ நம்மிடையே வாழும் “சே குவேராவின் தியாகம் எமக்கு சிலிர்ப்பூட்டுகிறது.

இருபத்தி மூன்று வயதே இருந்தும், இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் நிற்கக்கூடிய வாழ்க்கை வாழ்ந்து சென்ற புரட்சியாளன் “பகத் சிங் இன் வாழ்க்கை நமக்களிக்கும் பாடம் என்ன?

“எமக்கு தொழில் கவிதை, நாட்டிற்கு நல்லதுரைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்”  என்று உரக்கச்சொன்ன மகாகவியின் என்ன ஓட்டம் ஏன் அவ்வாரிருந்தது? விடுதலை பெரும் முன்னரே , விடுதலை அடைந்துவிட்டோம் என்ற தீர்க்க தரிசனம் அவருக்கு வந்தது எதனால்?

பத்து நாட்களாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் அண்ணன் “திலீபனின் போராட்டம் நமக்குச்சொல்வதென்ன.?

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இந்த நூற்றாண்டில் பேரவமானத்தை ஏற்படுத்திய வியட்நாம் போரில் , நெஞ்சுரத்துடன் தன தேசத்தை வழிநடத்திய எளியவர் “ஹோ சி மிங்கின் அர்பணிப்பு உலகிற்கு உரக்கச்சொல்வதென்ன..?

சர்வதேச சதிக்குள் சிக்கி, துரோகத்தால் தோற்கடிக்கப் பட்டிருக்கும் ஈழப்போராட்டத்திற்கும், தமிழ் ஈழ மக்களின் முகமாக முகவரியாக இருக்கும்,. தன் இனம் போற்றும் தலைமகனாக வாழும் அண்ணன் பிரபாகரனின் இலட்சியம் மாறாத உறுதி நமக்களிக்கும் பாடம் என்ன?

ஒன்றுதான் ! இவர்கள் வாழ்க்கை தன்னலம் பாராதது.பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது என்ற தீர்க்க தரிசனம் உணர்ந்திருந்தது. இவர்கள் வாழ்ந்த நாட்களால் இவர்கள் வாழ்க்கை மேன்மை அடையவில்லை.

மேன்மையான வாழ்க்கை வாழ்ந்ததால் வரலாறு இவர்களது வாழ்கைக்கு நாட்களை நீட்டித்திருகிறது.

Advertisements
Comments
  1. கூடலிங்கம் says:

    மனித சிந்தனையை தூண்டும் மகத்தான வரிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s