டார்வினுடன் ஒரு பயணம் – 1

Posted: January 30, 2014 in General
Tags: , , , ,

கேள்விகள் தான் மனித அறிவின் அச்சாணியாக விளங்குகிறது..

நம் முதாதையர், முன்னோர்களின் கேள்விகளும் அவர்கள் அதற்கு கண்டறிந்த பதில்களும் தான் இந்த மானுட சமூகத்தின் அறிவுபெட்டகமாக இன்று விளங்குகிறது. நியூடனின்  கேள்வி நமக்கு புவிஈர்ப்புவிசை தந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், கார்ல் மார்க்ஸ், போன்ற எண்ணற்ற பெரியோர்களின் கேள்விகள்தான் இந்த மனித சமுதாயத்தை வழிநடத்தி செல்லும் அறிவை நமக்கு அளித்திருக்கிறது.

அப்படி வாழ்ந்த எண்ணற்ற அறிஞர்களின் வரிசையில், ஆயிரமாண்டுகளாக மனிதர்களினால் நம்பப்பட்டு வந்த ஒரு நடைமுறையை, கேள்வியாக்கி அதற்கு விடை கண்டுபிடித்து அதை நமக்களித்து சென்ற பெருமகன் “சார்லஸ் டார்வின் அவர்கள்.

ஆறு நாட்களில் மனிதன் மற்றும் அணைத்து ஜீவராசிகளையும் கடவுள் தனி தனியே படைத்தார் என்று இன்றும் சொல்லப்பட்டு நம்பப்பட்டு வருகிறது.ஆனால் மனிதன் தனியான ஒரு படைப்பாக படைக்க படவில்லை அவன் அணைத்து உயிரினங்களையும் போன்று பரிநாம வளர்ச்சியால் உருவான ஒரு உயிரினம் என்ற டார்வின் சொன்னபோது அவர் ஒரு இறை மறுப்பாளராக ,நாத்திகராக கருதப்பட்டார்.

விடுவார்களா நம் மத குருக்கள்..? ஒன்று திரண்டு வந்து வாதிட்டு வழியில்லாமல் தோற்று திரும்பி விட்டனர் என்கிறது வரலாறு.ஆனால் டார்வின் இறைவனை மறுக்கவில்லை , அவரது கண்டுபிடிப்பு இறைத்தன்மையை அறிவியல் ரீதியாக வலுபடுத்தியதோ இன்றி இறை சக்தியை எதிர்க்கவில்லை. மனிதனாகவே மனிதன் படைக்கப்படவில்லை, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியே மனிதன் என்றுதான் அவர் தன் புத்தகமான “ ஜீவராசிகளின் மூலம்”த்தில் குறிப்பிடிருகிறார்.

ஆதிமனிதனும் மனித குரங்கும் ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து தான் வந்தார்கள் என்ற டார்வினின் கோட்பாடு தான் மதத்திற்கு எதிராக உள்ளதோ தவிர , இயற்கைக்கு அப்பால் ஒரு சக்தி உள்ளது என்ற உண்மையை, அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்கின்ற உண்மையை உறுதி செய்வதாகத்தான் அவரது கண்டுபிடிப்பு உள்ளது.

இந்து மதத்தில் வரும் தசாவதாரக் கதையும் (மச்சாவதாரம்), இஸ்லாமியர் கிறுத்துவர் போன்ற மதங்களில் பொதுவாக சொல்லப்படும் நோஹ் கதையும், கிரேக்கத்தில் உள்ள மதங்களில் சொல்லப்படும் நியுருஸ் கதையும் பொதுவாக மனித பரிணாம வளர்ச்சியில் மீன் போன்ற உயிர் வடிவம் உலகில் தோன்றியதையே சொல்லும்படியாக உள்ளது என்கிறார்கள் அறிஞர்கள். தசாவதாரத்தில் வருகின்ற முதல் ஐந்து அவதாரங்களும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையே சொல்லுகின்றதாம். அடுத்து வரும் நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம்,க்ரிஷ்ணவதராம்,ராமவதாரம் எல்லாம் மனிதன் மனிதனாக ஆனா பிறகு ஏற்பட்ட சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படியாக கூறப்பட்டிருகிறது என்கிறார்கள். ஆனால் மத குருக்களோ இதை இன்றளவும் ஏற்றுகொண்டபாடில்லை.

 

வாதம் பிரதிவாதம் என்று இன்றளவும் சர்சையாய் இருக்கும் மனிதனின் பிறப்பு என்ற ஒரு விஷயத்தை இதுவரை யாரும் எட்டாத உயரத்திற்கு எடுத்துசென்று காட்டியவர் டார்வின். இன்றில்லாவிடினும் மானுட சமூகம் மொத்தமும் ஒரு நாள் இந்த மகத்தான மனிதனை போற்றும்,. அன்று ஆத்திகம் நாத்திகம் எல்லாம் ஒரே புள்ளியில் நின்று இறைசக்தியை நேசித்து பயன்பெறும். டார்வின் கூறியது போன்று “தக்கன பிழைக்கும்,.. அவரின் கோட்பாடு நிஜமென்றால் அது எக்ககாலத்திற்கும் நிலைக்கும்.

Comments
  1. அற்புதமான பதிவு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s